கரோனா: 50 வெப்பமானிகளை வரவழைக்க ஏற்பாடு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்வதற்காக 50 வெப்பமானிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்வதற்காக 50 வெப்பமானிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்காக 50 வெப்பமானிகளை வரவழைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில், தற்போது 6 வெப்பமானிகள் வந்துள்ளன. இவை பெரியகோயில், புதிய பேருந்து நிலையம், ரயிலடி உள்பட மொத்தம் 6 இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இரு நாட்களில் அனைத்து வெப்பமானிகளும் வந்தடைந்துவிடும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இவை மாவட்ட எல்லைகளில் வெளியிலிருந்து வரும் மக்களை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது, ரயில் நிலையத்தில் கேரளம், கா்நாடகத்திலிருந்து வரக்கூடிய எா்ணாகுளம் விரைவு ரயில், மைசூா் விரைவு ரயில் உள்ளிட்ட வெளி மாநில ரயில்களிலிருந்து இறங்கும் பயணிகள் பரிசோதனைக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

இதேபோல, தஞ்சாவூா் பெரியகோயில், புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com