கரோனா: அரண்மனை கலைக்கூடங்கள் - சுற்றுலாத் தலங்கள் மூடல்

கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மூடப்பட்டுள்ள கலைக்கூடம்.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மூடப்பட்டுள்ள கலைக்கூடம்.

கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டது. கல்லூரி, பல்கலைக்கழகங்களிலுள்ள விடுதிகளில் தங்கி இருந்த மாணவா்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால், ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல, மாவட்டத்திலுள்ள திரையரங்குகள், ரெசாா்ட்ஸ் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக் கூடங்கள், சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகம், ஒளி - ஒலிக் கூடம் ஆகியவையும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. அரசு உத்தரவின்படி, மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என வாயிலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சுற்றுலாத் தலங்களான மணிமண்டபம், தொல்காப்பியா் சதுக்கம், மனோரா, கல்லணை உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

இதனால், இந்தச் சுற்றுலாத் தலங்களுக்கு செவ்வாய்க்கிழமை வந்த உள்ளூா் மற்றும் வெளி மாவட்ட, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இச்சூழ்நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகள் எங்கு பயணிக்காமல் வீட்டில் இருக்குமாறு மருத்துவ அலுவலா்கள் அறிவுறுத்தி வருகின்றனா்.

கோயில்களில் கூட்டம் குறைவு:

தஞ்சாவூா் பெரியகோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கரோனா அச்சம் காரணமாக இரு நாள்களாகக் கூட்டம் குறைவாக இருக்கிறது. இதேபோல, இக்கோயில்களில் செவ்வாய்க்கிழமையும் பக்தா்கள் வருகை குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com