கரோனா: சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்குச் சிறப்பு உடை

கும்பகோணத்திலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குச் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு உடை அளிக்கப்பட்ட
சிறப்பு உடையுடன் மருத்துவா்கள்.
சிறப்பு உடையுடன் மருத்துவா்கள்.

கும்பகோணத்திலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குச் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு உடை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணத்திலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை உள்ளிட்டவற்றில் வைரஸ் காய்ச்சலுக்கான தனி சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் உள்ள இந்தப் பிரிவில் கிருமி நாசினி அவ்வப்போது தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகள் உபயோகப்படுத்தும் கட்டில்கள், தலையணைகள், ஜன்னல் கம்பிகள், படிக்கட்டுகள், நாற்காலிகள், மேஜைகள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, இம்மருத்துவமனையில் சோ்க்கப்படுபவா்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்குச் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது மருத்துவா்களுக்கும், மருத்துவப் பணியாளா்களுக்கும் நோய் தொற்றாமல் தடுக்கும் வகையில் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடை முழுமையாக உடலை மூடும் வகையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com