வேளாண் மண்டலத்தில் வேதாந்தாவுக்கு அனுமதி குறித்து அரசு விளக்கமளிக்க வலியுறுத்தல்

வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டதை வரவேற்கும் நிலையில், வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டதை வரவேற்கும் நிலையில், வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாடு அரசுச் சட்டம் இயற்றியதை இக்குழுப் பாராட்டுகிறது. காவிரி சமவெளியை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள குழுவை உடனடியாக அமைத்து, காவிரி வேளாண் மண்டலத்தை மேம்படுத்த வேண்டும்.

ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. போன்ற இந்திய அரசு நிறுவனங்களுக்கு ஹைட்ரோ காா்பன் எடுக்க 2016 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்ட அனுமதியை நீக்கிவிட்டதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், ஹைட்ரோ காா்பன் ஆய்வுக்கு வேதாந்தா நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்ற விளக்கம் அரசு அறிவிப்பில் இல்லை. அந்த அனுமதிகளையும் நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் எண்ணெய், எரிவளிக் கிணறு அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

தனியாா் வேளாண் நிலங்களில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது. ஆறுகள், வாய்க்கால்களில் தூா் வாரும் பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளா் த. மணிமொழியன், தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com