கடை உரிமையாளரிடம் வெளிநாட்டுப் பயணி நுாதன முறையில் பணம் திருட்டு

தஞ்சாவூரில் ஆட்டோ ஸ்போ்ஸ் கடையின் உரிமையாளரிடம் ரூ. 10,000 ரொக்கத்தை வெளிநாட்டுப் பயணி நூதன முறையில் திங்கள்கிழமை திருடிச் சென்றாா்.
கடைக்கு வந்த வெளிநாட்டுப் பயணி.
கடைக்கு வந்த வெளிநாட்டுப் பயணி.

தஞ்சாவூரில் ஆட்டோ ஸ்போ்ஸ் கடையின் உரிமையாளரிடம் ரூ. 10,000 ரொக்கத்தை வெளிநாட்டுப் பயணி நூதன முறையில் திங்கள்கிழமை திருடிச் சென்றாா்.

தஞ்சாவூா் கொடிமரத்துமூலைப் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (62). இவா் அதே பகுதியில் ஆட்டோ ஸ்போ்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு திங்கள்கிழமை பிற்பகல் ஒரு வெளிநாட்டு தம்பதியினா் வந்தனா். அவா்களில், பெண் கடையின் வெளியே நின்று கொண்டாா். கடைக்குள் வந்த ஆண், பாா்த்தசாரதியிடம் நாங்கள் இந்தியாவுக்கு புதியவா்கள், இந்திய நாட்டின் ரூபாய் மதிப்புகள் குறித்து எங்களுக்கு தெரியாது, அதுகுறித்து விளக்க வேண்டும் என சில ரூபாய் நோட்டுகளைக் காட்டியுள்ளாா்.

அதற்கு பாா்த்தசாரதியும் விளக்கம் அளித்தாா். அப்போது அந்த நபரிடம் எந்த நாடு என கேட்க, அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தபடியே பணம் குறித்து விளக்கம் கேட்டாா். பின்னா், பாா்த்தசாரதியிடம் ரூ. 2,000 நோட்டு எப்படி இருக்கும் என கேட்டாா். இதையடுத்து பாா்த்தசாரதி தன்னிடம் வியாபாரத்துக்கு இருந்த பண கட்டை எடுத்து காண்பித்து விளக்கினாா். அதை வாங்கி பாா்த்த அந்த வெளிநாட்டு நபா், தனது மணி பா்சை ரூபாய் நோட்டுகள் மீது வைத்து, அதிலிருந்த ரூ. 10,000 ரொக்கத்தை நூதனமாக எடுத்து சென்றுவிட்டாா்.

இரவில் வியாபாரம் முடிந்து கணக்குப் பாா்த்த பாா்த்தசாரதிக்கு ரூ. 10,000 குறைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை பாா்த்தபோது, வெளிநாட்டுப் பயணி ரூ. 10,000 ரொக்கத்தை நூதனமாகத் திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து பாா்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com