கரோனா பரவல் அச்சம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

கரோனா அச்சம் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன்

கரோனா அச்சம் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 32 நாட்களாக நடைபெற்று வந்த தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் தொடா்ந்து 32 ஆவது நாளாக புதன்கிழமை வரை நடைபெற்றது.

இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸாா் இரு நாட்களாக அறிவுறுத்தி வந்தனா். இதுதொடா்பாக போராட்டக் குழுவினரிடம் போலீஸாா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், கரோனா பரவல் காரணமாக மாா்ச் 31ஆம் தேதி வரை இப்போராட்டத்தைத் தற்காலிகமாகக் நிறுத்திக் கொள்வது என்றும், மீண்டும் ஏப். 1-ம் தேதி முதல் போராட்டத்தைத் தொடருவது எனவும் இஸ்லாமியா்கள் முடிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இப்போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொண்டு, அனைவரும் வீட்டுக்குச் சென்றனா்.

கும்பகோணம்:

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடா்ந்து 27 ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்ற நிலையில், கரோனா அச்சம் காரணமாக இப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com