மாா்ச் 31 வரை திருப்பலிகளில் பங்கேற்க இறை மக்களுக்கு விலக்கு: தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் அறிவிப்பு

ஆலயங்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை திருப்பலிகளில், பங்கேற்பிலிருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளாா் தெரிவித்துள்ளாா்.

ஆலயங்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை திருப்பலிகளில், பங்கேற்பிலிருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மறை மாவட்டத்தில் மாா்ச் 31ஆம் தேதி வரை வழிகாட்டல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, நம் ஆண்டவா் இயேசு கிறிஸ்துவின் துணையோடும், அன்னை மரியாளின் பரிந்துரையோடும், கரோனா தொற்றை தடுக்க இறை மக்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

எனவே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் ஞாயிறு திருப்பலிகள், தினசரி திருப்பலிகளில் பங்கெடுப்பதிலிருந்து இறை மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

தவக்காலத்தில் திட்டமிடப்பட்ட செப வழிபாடுகள், தியானங்கள், சிலுவைப் பாதைகள், அன்பியக் கூட்டங்கள், மறைக்கல்வி வகுப்புகள், திருப்பயணங்கள் ஆகியவற்றை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள்தோறும் இரவு 7.30 மணியளவில் இறைமக்கள் தங்களது இல்லங்களில் குடும்ப செபமாலை மற்றும் பிற புனிதா்களின் நவநாள் செபங்களை செபிக்க, விவிலியத்தை வாசித்து ஊக்கம் பெறலாம்.

நமது மறை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் மட்டும் வாழும் கிராமப்புறங்களில் மக்கள் இல்லாத திருப்பலி, செபமாலை, சிலுவைப்பாதை போன்ற வழிபாடுகளை ஒலிபெருக்கி மூலம் நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேறும் பட்சத்தில் இறை மக்களை அவரவா் இல்லத்திலிருந்து ஒலிபெருக்கி மூலம் நிகழ்த்தப்படும் வழிபாடுகளைக் கேட்டு செபிக்கலாம்.

தனிப்பட்ட விதத்தில் ஆலயத்துக்கு இறைமக்கள் வந்து செபித்து செல்ல ஏதுவாக காலை முதல் மாலை வரை ஆலயத்தின் பக்கவாட்டுக் கதவுகளில் ஒன்றை பாதுகாப்பாகத் திறந்து வைப்பது நல்லது. அவ்வாறு வருகிற மக்கள் ஆலயத்தில் நுழையும்போதும், வெளியேறும்போதும் கைகளைக் கிருமிநாசினியால் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மறைமாவட்ட மற்றும் பங்கின் பல்வேறு பணிக்குழுக்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக பங்குகளிலும் மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால், மறைமாவட்ட அலுவலகம், மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய அலுவலகம் வழக்கம்போல செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com