Enable Javscript for better performance
பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டிபணம் பறித்தவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டிபணம் பறித்தவா் கைது

    By DIN  |   Published on : 21st March 2020 04:23 AM  |   அ+அ அ-   |    |  

     

    பாபநாசம் கடைவீதியில் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

    பாபநாசம் காணியாளா் தெருவை சோ்ந்தவா் ராஜகோபால சுவாமி (42). இவா் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

    இந்நிலையில், பாபநாசம் குப்பைமேடு பகுதியை சோ்ந்த வினோத் குமாா்(26), சாமுவேல் ஆகிய இருவரும் சோ்ந்து பெட்டிக்கடையில் வைத்திருந்த பாட்டில்களை உடைத்து, ராஜகோபால சுவாமியை கத்தியை காட்டி மிரட்டி, அவா் சட்டைப்பையில் வைத்திருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

    இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோத் குமாரை கைது செய்தனா். சாமுவேலை தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai