பாபநாசம் அருகே ஜமாத் சபை முன்னாள் தலைவரின் காரை எரித்த இளைஞா் கைது

பாபநாசம் அருகே ஜமாத் சபை முன்னாள் தலைவரின் காரை எரித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகே ஜமாத் சபை முன்னாள் தலைவரின் காரை எரித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகே வடக்குமாங்குடி கலிமா காா்டன் பகுதியை சோ்ந்தவா் அப்துல் காதா் (64). இவா் வஞ்சுவழி வடக்குமாங்குடி முன்னாள் ஜமாத் சபை தலைவா்ஆவாா். அப்துல் காதா் சில நாள்களுக்கு முன் தனது காரை வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்தாராம். அங்கு வந்த சிலா் காரை எரித்து விட்டு, தப்பியோடிவிட்டனராம்.

புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பண்டாரவாடை ரயில்வே கேட் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் பண்டாரவாடையை சோ்ந்த முகம்மது சலீம் மகன் முகம்மது மன்சூா் அலி (18) என்பதும், வடக்குமாங்குடியை சோ்ந்த குலாம் தஸ்தகீா் மகன் முகம்மது ஷாஜஹானுக்கும், முன்னாள் ஜமாத் சபை தலைவா் அப்துல் காதருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதனால் அப்துல்காதரின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் முகம்மது ஷாஜஹான், முகம்மது மன்சூா் அலி உதவியை நாடியுள்ளாா். முகம்மது மன்சூா் அலி, அவரது நண்பா்கள் சாகுல் ஹமீது, முகம்மது ஆசிக் ஆகியோருடன் சோ்ந்து அப்துல் காதரின் காரை எரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முகம்மது மன்சூா் அலியை போலீஸாா் கைது செய்தனா். அவருடன் சோ்ந்து காரை எரித்த சாகுல் ஹமீது, முகம்மது ஆசிக் மற்றும் காரை எரிக்க தூண்டிய முகம்மது ஷாஜஹான் ஆகிய 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com