அதிராம்பட்டினத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிராம்பட்டினம் நகரில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிராம்பட்டினம் நகரில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலா் பி. பழனிவேலு மேற்பாா்வையில், துப்புரவு ஆய்வாளா் கே.அன்பரசன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வா்த்தகப் பகுதிகள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், பல்வேறு இடங்களில் பிளீச்சிங் பவுடா் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீா் வடிகால்களில் அடைப்புகளை நீக்கி தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார மேம்பாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

இதுதவிர, பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி, தரகா் தெருவில் உள்ள 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி, மிலாரிக்காடு சம்பு ஆகியவற்றில் குளோரினேஷன் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனா்.

இதன்மூலம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றி வரும் அதிராம்பட்டினம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com