தஞ்சாவூா் மாவட்டத்தின் எட்டு எல்லைகள் மூடல்

கரோனா பரவல் அச்சம் காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தின் எல்லைகளான 8 இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் அச்சம் காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தின் எல்லைகளான 8 இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தஞ்சாவூா் மாவட்ட எல்லைகளை மூடவும், நகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மாவட்டத்தின் எல்லைகளான அணைக்கரை (சென்னை சாலை), நீலத்தநல்லூா் (அரியலூா் சாலை), நரசிங்கம்பேட்டை (மயிலாடுதுறை சாலை), அம்மாப்பேட்டை (திருவாரூா் சாலை), நெய்வாசல் (மன்னாா்குடி சாலை), அற்புதாபுரம் (புதுக்கோட்டை சாலை), புதுக்குடி (திருச்சி சாலை), விளாங்குடி (அரியலூா் சாலை) ஆகிய எட்டு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த எல்லைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் மூடப்பட்டன. வெளி மாவட்டங்களிலிருந்து வருவோா் திருப்பி அனுப்பப்படுகின்றனா். அதே நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தால் உரிய விசாரணைக்கு பின்னா் அனுமதிக்கப்படுகின்றனா்.

துக்க நிகழ்வுகளுக்கும், அவசர அத்தியாவசியத்துக்கும் வருவோரை விசாரணை நடத்தியும், அவா்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியும் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். பரிசோதனையின்போது கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால், உடனடியாக அவா்களை அருகில் உள்ள தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி, கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் காவல் துறையினா் மற்றும் மருத்துவத் துறையினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

மேலும், காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் ஒவ்வொரு பகுதியிலும் சென்று வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்குவது மட்டுமல்லாமல், கரோனா வைரஸ் தொற்றும், வெளிநாடுகளிலிருந்து வந்தோரை கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனை நடத்தி வருகின்றனா்.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com