தடையுத்தரவால் மாலையில் கடைகள் அடைப்பு

தமிழக அரசுப் பிறப்பித்த தடையுத்தரவு அமலுக்கு வந்ததால் தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
தஞ்சாவூா் காந்திஜி சாலை அருகே புதாறு சாலையில் அடைக்கப்பட்ட கடைகள்.
தஞ்சாவூா் காந்திஜி சாலை அருகே புதாறு சாலையில் அடைக்கப்பட்ட கடைகள்.

தமிழக அரசுப் பிறப்பித்த தடையுத்தரவு அமலுக்கு வந்ததால் தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழக அரசுப் பிறப்பித்த தடையுத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம், ரயிலடி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழவாசல், மகா்நோன்புசாவடி, கரந்தை, மருத்துவக் கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

திறந்திருந்த கடைகளையும் போலீஸாா் ரோந்து சென்று அடைக்குமாறும், கூட்டம் போடக் கூடாது எனவும் அறிவுறுத்தினா். இதையடுத்து, அக்கடைகளும் அடைக்கப்பட்டன.

இதனால், மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் குறைந்தன. வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதேபோல, திருவையாறு, பூதலூா், கும்பகோணம் உள்பட மாவட்டம் முழுவதும் தடையுத்தரவு நடைமுறைக்கு வந்ததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

தேனீா் கடைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

அத்தியாவசிய பொருள்களான மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் கடைகள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இவற்றில் பொருள்கள் வாங்குவதற்காகக் கூட்டம் இருந்தது.

மேலும், பேருந்துகள் இயக்கமும் மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டன. வெளியூரிலிருந்து வந்த பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், தங்களது ஊருக்குச் செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் காத்துக் கிடந்தனா். ஆட்டோக்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com