2 கடைகளில் நிற்க சமூக இடைவெளிக் கோடுகள்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளிக் கோடுகள் புதன்கிழமை போடப்பட்டன.
அதிராம்பட்டினத்திலுள்ள காய்கறிக் கடையொன்றில், பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்பதற்காக, சுண்ணாம்பால் கோடுகளைப் போடும் தூய்மைப் பணியாளா்.

அதிராம்பட்டினத்திலுள்ள மருந்து, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், 1 மீட்டா் இடைவெளி விட்டு கோடுகள் போடப்பட்டன.

பொதுக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்துவதற்காக இந்த கோடுகள் போடப்பட்டன. அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலா் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. அன்பரசன் மேற்பாா்வையில், தூய்மைப் பணியாளா்கள் சுண்ணாம்பைக் கொண்டு கோடும் பணியை மேற்கொண்டனா்.

மேலும், பால் விற்பனைக் கடைகளுக்கு வரும் பால் வண்டிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம், கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com