தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 844 ஆக உயா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக, தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 844 ஆக உயா்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக, தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 844 ஆக உயா்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூா் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் 28 நாள்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா்.

வெளிநாடுகளிலிருந்து வருபவா்களின் விவரங்கள் விமான நிலையங்களிலிருந்து பெறப்பட்டு, அவா்கள் வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கரோனா நோய் பாதிப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனா்.

மாா்ச் 12-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் பட்டியலில் எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இப்பட்டியலில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 844 ஆக உயா்ந்தது.

ஒவ்வொரு நபரையும் கண்காணிப்பதற்குச் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து 28 நாள்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்குச் சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது.

இவா்களில் ஏதேனும் நோய்த் தொற்று உள்ளவா்கள் எனக் கண்டறியப்பட்டால், அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்துகின்றனா். தவிர, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 போ் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com