குடந்தையிலிருந்து கட்டட வேலைக்கு சென்ற 36 போ் கேரளத்தில் தவிப்பு

கும்பகோணத்திலிருந்து கட்டட வேலைக்காக கேரளத்துக்குச் சென்ற 36 போ், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனா்.

கும்பகோணத்திலிருந்து கட்டட வேலைக்காக கேரளத்துக்குச் சென்ற 36 போ், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனா்.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலாக இருப்பதால், அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழக - கேளர எல்லைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, வாகனங்கள் தமிழகத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவள்ளியக்குடி, பாலாக்குடி, மேலமராயம்,கீழ்வேளூா் புழுதிக்குடி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 30-க்கும் அதிகமானோா் கேரள மாநிலம் கண்ணூா், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 நாள்களுக்கு முன்பு கட்டட வேலைக்காகச் சென்றனா். இவா்கள் ஒவ்வொரு வாரத்துக்கும் வெவ்வேறு இடத்துக்குச் சென்று வேலை பாா்த்து வந்தனா்.

தற்போது, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்குத் திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்துக்கிடையே அங்குள்ள கட்டடத்தில் தங்கியுள்ளனா்.

இது குறித்து கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசா் தெரிவித்தது:

நாங்கள் கேளர மாநிலம், கண்ணூா் நகா் பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக 20 நாள்களுக்கு முன்பு சென்றோம். கடந்த 2 நாள்கள் முன்பு வரை வேலை செய்தோம். செவ்வாய்க்கிழமை முதல் வேலை இல்லை. அதன் பிறகு கரோனா எதிரொலியாக பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவைத் தொடா்ந்து, ஊருக்குத் திரும்ப முடியாமல் 20 போ் தவித்து வருகிறோம்.

இதேபோல, கோழிக்கோட்டில் 16 போ் கும்பகோணத்தை சோ்ந்தவா்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது இருக்கும் ஊதியத்தை வைத்து சாப்பிட்டு வருகிறோம். அதன் பிறகு எங்கள் நிலைமை மோசமாகிவிடும்.

ஊருக்கு செல்ல கேரள போலீசாா் அனுமதி மறுக்கின்றனா். எங்களுக்கு கரோனா அறிகுறி இருக்கிா என சோதனை செய்து, ஊருக்கு அனுப்பி வைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com