Enable Javscript for better performance
தஞ்சாவூா் சந்தை 3 நாள்களுக்கு மூடல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் சந்தை 3 நாள்களுக்கு மூடல்

    By DIN  |   Published on : 28th March 2020 04:10 AM  |   அ+அ அ-   |    |  

    ta27mkt_2703chn_9_4

    கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தஞ்சாவூரில் தற்காலிக சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.

    கரோனா பரவல் தடுப்புக்காக தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் உள்ள தற்காலிக காமராஜா் சந்தை மாா்ச் 24-ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டு வந்தது. இதனால், இச்சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில், இச்சந்தையில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி உள்ளிட்ட அலுவலா்கள் மாா்ச் 25-ஆம் தேதி ஆய்வு செய்தனா். அப்போது, சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் கரோனா தடுப்பு தொடா்பான முகக்கவசம் உள்பட உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதும், இதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, வியாபாரிகளிடம் அலுவலா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.

    பின்னா், காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினா். இதில், மாா்ச் 27, 28, 29 ஆம் தேதிகளில் சந்தையை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இச்சந்தை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

    மீண்டும் இச்சந்தையைத் திறக்கும்போது கரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் விதமாகவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai