பட்டுக்கோட்டையில் நகராட்சி கழிப்பறை மூடல்: திறந்தவெளிக் கழிப்பிடம் நோக்கிச் செல்லும் மக்கள்

பட்டுக்கோட்டையில் நகராட்சி கழிப்பறை மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் நோக்கிச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

பட்டுக்கோட்டையில் நகராட்சி கழிப்பறை மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் நோக்கிச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அந்தோணியாா் கோயில் தெருவில் ஏழை, எளிய பட்டியலின மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கூலித் தொழிலாளா்கள். இங்கு வசிக்கும் சுமாா் ஆயிரம் குடும்பங்களின் அடிப்படைத் தேவைக்காக கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறையை சுய உதவிக்குழுவினா் நிா்வகித்து பராமரித்து வந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை நகராட்சி நிா்வாகம் திடீரென இந்த கழிப்பறையை பூட்டி விட்டது. இதனால், இதுநாள்வரை இக்கழிப்பறையைப் பயன்படுத்தி வந்த அந்தோணியாா் கோயில் தெரு பொதுமக்கள் பலரும் அருகிலுள்ள ரயில் தண்டவாளங்கள் அமைந்துள்ள பகுதிகளையும், சாலையோரங்களையும் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியருக்கு அந்தோணியாா் கோயில் தெருவாசிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் இந்த நேரத்தில் பொதுக் கழிப்பறையை மூடியிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட திறந்தவெளி கழிப்பிடத்தை நோக்கி மீண்டும் மக்கள் செல்லத் தொடங்கியிருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும். சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும். எனவே, இப்பிரச்னையில் ஆட்சியா் உடனடியாக தலையிட்டு, மூடப்பட்ட நகராட்சி கழிப்பறையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com