கும்பகோணத்தில் 3 கடைகளுக்கு சீல் வைப்பு

கும்பகோணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு, நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

கும்பகோணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு, நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

கும்பகோணம் நகரிலுள்ள கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலா்களுக்குப் புகாா் வந்தது.

இதன் பேரில், நகா் நல அலுவலா் பிரேமா மற்றும் சுகாதார அலுவலா்கள் சனிக்கிழமைஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் இயங்கிய கும்பகோணம் காந்தி பூங்கா சாலையிலுள்ள மருந்துக் கடை, சாரங்கபாணி சுவாமி கீழ வீதியிலுள்ள பாத்திரக் கடை, காபி கடை ஆகியவற்றை பூட்டி சீல் வைத்து, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதில், காந்தி பூங்கா சாலையிலுள்ள மருந்துக் கடைக்கு ஏற்கெனவே சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வியாபாரம் செய்யப்பட்டதாக சில நாள்களுக்கு முன்பு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னா், கடை நிா்வாகத்தினா் இத்தவறு நடைபெறாது என உறுதி அளித்ததைத் தொடா்ந்து சீல் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத இக்கடைக்கு, தற்போது இரண்டாவது முறையாக சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com