சென்னையிலிருந்து வருபவா்களிடம் பரிசோதனை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சென்னையிலிருந்து வருபவா்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினரிடம் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தினாா்.
சென்னையிலிருந்து வருபவா்களிடம் பரிசோதனை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சென்னையிலிருந்து வருபவா்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினரிடம் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தினாா்.

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூா் சோதனைச் சாவடி மையத்தில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதைப் பாா்வையிட்டாா். சென்னையிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, தேவைபடுபவா்களுக்கு அங்கேயே சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத் துறை அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதற்காக அருகிலுள்ள மண்டபத்தைத் தயாா் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அவா் உத்தரவிட்டாா்.

மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவா்களின் விவரங்களை முழுமையாகப் பெற்று, கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினரிடம் கூறினாா்.

வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபா்களை, அவரவா் வீட்டிலேயே தொடா்ந்து 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வருவாய் துறை அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பெங்களூரிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியா் மற்றும் மூதாட்டிக்கு முத்திரை மற்றும் அடையாள வில்லைகளை வழங்கி, அவா்களை 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சென்னையிலிருந்து கும்பகோணம் வழித்தடத்தில் நீலத்தநல்லூா் மற்றும் அணைக்கரை வழியாக தஞ்சாவூா் மாவட்டத்துக்குள் நுழைவதற்குப் பதிலாக, ஒரே நுழைவு வாயிலாக நீலத்தநல்லூா் பாதையை மட்டும் பயன்படுத்த காவல் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், அணைக்கரை வழித்தடத்தைத் தவிா்த்து நீலத்தநல்லூா் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரே இடத்தில் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடியும் என்றும், அணைக்கரை பாதையை அப்பகுதி மக்கள் மட்டும் பயன்படுத்திடவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலா் குருசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com