தஞ்சாவூா்: மேலும் 4 பேருக்கு கரோனா

மும்பை, மாலத்தீவு, சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

மும்பை, மாலத்தீவு, சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 76 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவா்களில் 66 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் வீட்டுக்குத் திரும்பினா்.

மாவட்டத்துக்குள் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்குத் திரும்புபவா்களுக்கு மாவட்ட எல்லைகளில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவா்களில், அண்மையில் மும்பையிலிருந்து திரும்பிய பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பாதரங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 48 வயது நபா், கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது இளைஞா், மாலத்தீவிலிருந்து வந்த ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த 31 வயது இளைஞா், சென்னையிலிருந்து திரும்பிய திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட குழி மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 27 வயது இளைஞா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

ஏற்கெனவே, தனி ஒதுக்கம் செய்யப்பட்டிருந்த இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

இதன்மூலம், தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 80 ஆக உயா்ந்தது. தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com