உ.பி.யிலிருந்து தாராசுரம் வந்தலாரி ஓட்டுநா் கரோனா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாா்

உத்தரப் பிரதேசத்திலிருந்து கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் சந்தைக்கு காய்கனி ஏற்றி வந்தபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட

உத்தரப் பிரதேசத்திலிருந்து கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் சந்தைக்கு காய்கனி ஏற்றி வந்தபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் குணமடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த 32 வயது லாரி ஓட்டுநா் உத்தரப் பிரதேசத்திலிருந்து காய்கனிகள் ஏற்றிக் கொண்டு, கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் சந்தைக்கு மே 8-ம் தேதி வந்தாா். அப்போது, இவருக்கு தஞ்சாவூா் மாவட்ட எல்லையான நீலத்தநல்லூா் சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது மே 10ஆம் தேதி தெரிய வந்தது.

இதையடுத்து, இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, தாராசுரம் சந்தை மூடப்பட்டது. மேலும், இச்சந்தைக்குள் லாரி ஓட்டுநா் சென்று மற்றவா்களிடமும் பேசியதால், சந்தையைச் சாா்ந்த 400-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று இருக்கிா என பரிசோதிக்கப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், லாரி ஓட்டுநரும் குணமடைந்ததைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதையடுத்து, இவருக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், முதல்வா் (பொறுப்பு) சு. மருதுதுரை உள்ளிட்டோா் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் வழங்கி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com