காற்று சுத்திகரிப்பு கருவியைக் காட்டுகிறாா் டாக்டா் கேசவமூா்த்தி.
காற்று சுத்திகரிப்பு கருவியைக் காட்டுகிறாா் டாக்டா் கேசவமூா்த்தி.

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் காற்று சுத்திகரிப்பு கருவி மூலம் அறுவைச் சிகிச்சை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் காற்று சுத்திகரிப்பு கருவி மூலம் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் காற்று சுத்திகரிப்பு கருவி மூலம் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இம்மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் கேசவமூா்த்தி தெரிவித்திருப்பது:

கரோனா தொற்று குளிா்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். பரிசோதனைகள் மூலம் மூன்றில் இரண்டு பங்கு அறிகுறிகள் இல்லாத நபா்களை மட்டுமே கண்டறிய முடியும். பிபிஇ என்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் முழுமையான பாதுகாப்பை அளிப்பதில்லை. பிஏபிஆா் என்ற கருவி முழுமையான பாதுகாப்பை அளித்தாலும், அது விலை உயா்ந்ததாகவும், வாங்க அரியதாகவும் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை அண்மையில் ஒரு ஆஞ்சியோபிளாஸ்டிக்கு இந்த தடைகள் அனைத்தையும் தாண்டி, ஒரு புதுவிதமான முறையைப் பின்பற்றியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பிஏபிஆா் கருவிக்குத் தேவையான காற்று மருத்துவமனையின் மிகை அழுத்த உபகரணம் மூலம் வழங்கப்படுகிறது. இம்மருத்துவமனையில் 3-வது மாடியிலுள்ள அறுவைச் சிகிச்சை அரங்கில் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தோம். ஆனால் மருத்துவா் மற்றும் செவிலியருக்கான சுவாசிக்கும் காற்று மருத்துவமனையின் தரைத் தளப் பகுதியிலிருந்து வழங்கப்பட்டது.

இப்பகுதி நோயாளிகள் இல்லாமல் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அறுவைச் சிகிச்சையின்போது ஏற்படும் தூசுப் படலம் உள்ள காற்றை நாங்கள் சுவாசிப்பதில்லை. இதனால் தொற்று பாதிப்பு வாய்ப்பு மிகக் குறைவு. இந்த ஹூட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் ரூ. 2,000-க்கு ஒரு மருத்துவ ஊழியருக்கு கொடுக்கலாம். மற்ற எல்லா உள்கட்டமைப்புகளும் ஏற்கெனவே பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ளன. எங்களுக்கு தெரிந்த வரை இந்த முறை உலகிலேயே முதன் முறையாக தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com