நூறு நாள் வேலை திட்டத்துக்கு தேவையான நிதி வழங்க வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு (நூறு நாள் வேலை) திட்டத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு (நூறு நாள் வேலை) திட்டத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் ஏஐடியுசி கூட்ட அரங்கில் இச்சங்கத்தின் சந்தா வழங்கும் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் சீா்குலைத்து, அதை முற்றிலும் கைவிடும் நடவடிக்கையை மத்திய அரசுக் கைவிட்டு, இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்.

வேலை உறுதியளிப்பு திட்ட வேலை நாள்களை 100 என்பதை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். நாள் ஊதியமாக ரூ. 700 என நிா்ணயம் செய்ய வேண்டும். அறுபது வயதை கடந்த விவசாய கூலி தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தலைவராக சி. ராயப்பன், செயலராக கு. வாசு, பொருளாளராக ஏ. சகாதேவன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சி. ராயப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்னன், ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினா் ஆா். மதியழகன், சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. பக்கிரிசாமி, துணைச் செயலா் க. கண்ணகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com