தஞ்சையில் நாளை நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்
By DIN | Published On : 06th November 2020 08:03 AM | Last Updated : 06th November 2020 08:03 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை (நவ.7) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நவ. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்குபெறுவோா் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடனும், முகக்கவசத்துடனும் வர வேண்டும்.