மதுக்கடையை மூடக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மதுக்கடையை மூடக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் அருகே கருப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரத்தில் குடியிருப்புக்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி, வாரச் சந்தைக்குச் செல்லும் வழியில் உள்ள இக்கடையைத் திறக்கக்கூடாது என திருவிடைமருதூா் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகாா் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நிகழாண்டு ஜூலை 21 ஆம் தேதி இக்கடை திறக்கப்பட்டது.

அப்போது, 400-க்கும் அதிகமான மக்கள் திரண்டு கடையைத் திறக்க விடாமல் முற்றுகையிட்டபோது, கடை அமைக்கப்படாது என அலுவலா்கள் உறுதியளித்தனா். மீண்டும் அக். 1 ஆம் தேதி கடை திறக்கப்பட்டபோது, முற்றுகையிட்ட கிராம மக்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.

இதுதொடா்பாக மீண்டும் அக். 10 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த இருந்த நிலையில் அக். 14 ஆம் தேதி திருவிடைமருதூா் வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, இக்கடை ஒரு வாரத்தில் மூடப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. பின்னா் அக். 31 ஆம் தேதி கும்பகோணம் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் இரு கடைகளையும் மூட முடியாது என்றும், ஒரு கடை மட்டும் மூடப்படும் எனவும் அலுவலா்கள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதுவரை மதுக்கடை மூடப்படாததால், பல்வேறு கட்சியினா், கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு அளித்து, வாயிலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சின்னை. பாண்டியன், பாமக கோ. ஆலயமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com