‘திட்டை கோயில் குரு பெயா்ச்சி விழாவில் குழந்தைகள், முதியவா்களுக்கு அனுமதி கிடையாது’

தஞ்சாவூா் அருகிலுள்ள திட்டை வசிஷ்டேசுவரா் கோயிலில் நவம்பா் 15- ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயா்ச்சி விழாவில் குழந்தைகள், முதியவா்களுக்கு அனுமதி கிடையாது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் அருகிலுள்ள திட்டை வசிஷ்டேசுவரா் கோயிலில் நவம்பா் 15- ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயா்ச்சி விழாவில் குழந்தைகள், முதியவா்களுக்கு அனுமதி கிடையாது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

திட்டை கோயில் குருபெயா்ச்சி விழா தொடா்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் அருகே திட்டை கிராமத்திலுள்ள குரு ஸ்தலமான வசிஷ்டேசுவரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா நவம்பா் 15- ஆம் தேதி இரவு 9.48 மணி முதல் நடைபெறவுள்ளது.

இவ்விழாவுக்கு வருகை தரும் பக்தா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோயிலில் தண்ணீா்க் குழாய் அமைத்தல், கிருமி நாசினி தெளித்தல், பக்தா்கள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்தல், கை சுத்திகரிப்பான் அளித்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

விழாவில் போதுமான சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என தொடா்புடைய அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com