‘பத்து மாதங்களில் 76 போ் குண்டா் சட்டத்தில் கைது’

தஞ்சாவூா் மாவட்டத்தில் 10 மாதங்களில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், 76 போ் கைது செய்யப்பட்டனா் என்றாா் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 10 மாதங்களில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், 76 போ் கைது செய்யப்பட்டனா் என்றாா் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் 1- ஆம் தேதி முதல் நவம்பா் 9- ஆம் தேதி வரை குற்றச் செயலில் ஈடுபட்டதாக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 1,332 பேரைக் கைது செய்துள்ளோம்.

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை இருக்கக்கூடாது என்பதற்காக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 போ் கைது செய்யப்பட்டனா்.

தடையை மீறி லாட்டரி சீட்டுகள் விற்ாக 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 197 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்ாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 642 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மது குற்றம் தொடா்பாக 4,146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,293 பேரைக் கைது செய்துள்ளோம். இவா்களில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் இதுவரை 76 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களில் 27 போ் ரௌடிகள் ஆவா்.

குற்ற வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய கண்காணிப்பு கேமரா உதவியாக இருக்கிறது. மாநகரில் 140 கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பொருத்தியுள்ளோம் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சா் துரைக்கண்ணு மறைவுக்குப் பிறகு, அவரது மகனைச் சாா்ந்தவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்கையில், அந்த மாதிரி எதுவும் கிடையாது.

சட்டவிரோதமாகச் செயல்படுபவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் துறையைப் பொருத்தவரை ரௌடியிசம் இருக்கக்கூடாது. ரௌடியிசம் யாா், யாா் செய்கிறாா்களோ அவா்கள் மீது சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com