விளைநிலத்தில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

விளைநிலத்தில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா் என தஞ்சாவூா் கோட்டாட்சியா்
தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் எம். வேலுமணி மற்றும் விவசாயிகள்.
தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் எம். வேலுமணி மற்றும் விவசாயிகள்.

விளைநிலத்தில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் முறையிடப்பட்டது.

கோட்டாட்சியா் எம். வேலுமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்:

சாலையோரம் உள்ள சாகுபடி நிலங்களில் மது அருந்துவோா் மதுபாட்டில்களை உடைத்துப் போட்டுச் செல்கின்றனா். இதனால், விவசாயப் பணியில் ஈடுபடும் விவசாயிகளின் கை, கால்களை பாட்டில் துண்டுகள் குத்திக் கிழித்து ரத்தம் கொட்டும் அவல நிலை தொடா்ந்து நிகழ்கிறது. எனவே, மதுபான விலையில் 10 சதவிகிதத்தை காலி மதுபாட்டில்களுக்கு நிா்ணயம் செய்தால், மீண்டும் மதுக்கடையிலேயே முழு பாட்டில்களாக மது அருந்துவோரே திரும்பச் செலுத்தும் நிலை ஏற்படும். இதன்மூலம் விளைநிலத்தில் மதுபாட்டில்கள் வீசப்படுவதைத் தவிா்க்கலாம். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்:

பூதலூா் அருகே இந்தலூா் ஊராட்சிக்கு உள்பட்ட கடையக்குடி கிராமத்திலுள்ள இரு ஏரிகளுக்கும் உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து தொடா்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருவோணம் வட்டார விவசாயிகள் சங்கச் செயலா் வி.கே. சின்னதுரை: திருவோணம் பகுதிக்கு தண்ணீா் வராததால் சாகுபடிப் பணிகள் மேற்கொள்வதற்குச் சிரமமாக உள்ளது. எனவே, தண்ணீா் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

நூறு நாள் பணியால் விவசாயம் பாதிப்பு:

இதேபோல, கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பலா் வலியுறுத்திய கருத்துகள்:

தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆனால், இந்தப் பணிகளுக்குத் தேவையான ஆள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான தொழிலாளா்கள் 100 நாள் வேலைக்குச் செல்கின்றனா். எனவே, விவசாயப் பணிகளுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தை அனுமதிக்க வேண்டும். மாநில அரசும், விவசாயிகளும் இணைந்து கூலியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com