ஒரத்தநாட்டில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவா்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நெடுந்தொலைவில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவா்களுக்காக ஒன்றிய வாரியாகச் சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் நவ. 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை நடைபெறவுள்ளது.

இதில், மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்படவுள்ளது. இந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com