அருந்ததி ராய் பாடம் நீக்கத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராயின் பாடம் நீக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பல்வேறு கட்சியினா், இயக்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பல்வேறு கட்சியினா், இயக்கத்தினா்.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராயின் பாடம் நீக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள், கனிம வளங்கள், வனப்பகுதி பாதுகாப்பு குறித்து எழுத்தாளா் அருந்ததி ராய் எழுதிய தோழா்களுடன் ஒரு பயணம் என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடப் பிரிவில் இருந்தது. இப்பாடம் இந்துத்துவா பின்னணி மிரட்டல் காரணமாக திடீரென நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கஞ்சா விற்பனை, ஏரி ஆக்கிரமிப்பாளா்களை அம்பலப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மோசஸ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், செய்தியாளா் மோசசை பாதுகாக்க தவறிய காவல் துறையைக் கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைச் செயலா் ஐ.எம். பாதுஷா, மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகரச் செயலா் ராவணன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com