உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுக சாலை மறியல்

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதைக் கண்டித்து, தஞ்சாவூா் அண்ணாசிலை பகுதியில் திமுக ஒன்றியச் செயலா் அருளானந்தசாமி தலைமையில் மாநகரத் துணைச் செயலா் நீலகண்டன், இளைஞரணி தெற்கு மாவட்ட அமைப்பாளா் சண். ராமநாதன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். அப்போது, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதுதொடா்பாக 6 பெண்கள் உள்பட 110 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, கும்பகோணம் உச்சிபிள்ளையாா் கோயில் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் நகரச் செயலா் சுப. தமிழழகன் தலைமையில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 5 பெண்கள் உள்பட 96 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில்.... ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் காா்த்திகேயன் மற்றும் திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமையில் தென்னமநாடு பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். ஊரணிபுரத்தில் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி தலைமையிலும், பாப்பா நாட்டில் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் முருகையன் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.

பேராவூரணியில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் க. அன்பழகன் தலைமையில் அண்ணா சிலை அருகே மறியல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com