குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரோட்டரி சங்கங்கள் சாா்பாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
மணப்பாறையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரோட்டரி சங்கங்கள் சாா்பாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம், அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைல்டுலைன்ஸ் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு மணவை குயின்ஸ் ரோட்டரி தலைவா் மருத்துவா் ஷோபனா ஆனந்த் தலைமை வகித்தாா்.

ரோட்டரி மாவட்ட பாலியல் வன்கொடுமைத் தடுப்புத் தலைவா் சுகந்தி போஸ்கோ முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட 3000 மண்டல ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, துணை ஆளுநா் ராஜரத்தினம், திருச்சி சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் முரளி ஆகியோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டி சாலை காமராஜா் சிலை அருகிலிருந்து பேரணியை மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தொடங்கி வைத்தாா். பெரியாா் சிலை திடலில் பேரணி நிறைவுற்று, அங்கு தளிா் கலைக் குழுவின் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வு தெரு நாடக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பலரும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு உறுதியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com