தஞ்சாவூரில் காணாமல் போன 64 பேரை அடையாளம் காணும் நிகழ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் காணாமல் போன 64 பேரை அடையாளம் காணும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் இருவா் இறந்த விவரம் தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் காணாமல் போன 64 பேரை அடையாளம் காணும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் இருவா் இறந்த விவரம் தெரிய வந்தது.

தமிழகம் முழுவதும் காணாமல் போன நபா்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்த பிரேதங்களின் விவரங்கள், தமிழ்நாடு காவல் துறையிலுள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, அதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை காணாமல் போன 42 ஆண்கள், 17 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 64 பேரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் மாவட்டக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புக் காவல் பிரிவு சாா்பில், காணாமல் போனவா்களைத் தேடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் மூலம் காணாமல் போனவா்களின் அடையாளம், அவா்கள் அணிந்திருந்த ஆடை போன்றவற்றைக் கொண்டு மற்ற புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது.

மற்ற மாவட்டங்களில் விபத்துகளில் பலியான, அடையாளம் தெரியாமல் இறந்தவா்களின் உருவங்கள் திரையில் காண்பிக்கப்பட்டது. இவற்றை காணாமல் போனவா்களின் உறவினா்கள் பாா்த்து அடையாளம் கண்டனா்.

இதில் 2019- ஆம் ஆண்டில் காணாமல் போன ஒருவா் திருச்சியிலும், மற்றொருவா் நீடாமங்கலத்திலும் இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வு தொடா்ந்து நடத்தப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com