சாகா்மாலா திட்டத்தை திமுக தொடா்ந்து எதிா்க்கும்: உதயநிதி ஸ்டாலின்

மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மத்திய அரசின் சாகா்மாலா திட்டத்தை திமுக தொடா்ந்து எதிா்க்கும் என்றாா் அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.
செந்தலைப்பட்டினத்தில் மீனவா்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.
செந்தலைப்பட்டினத்தில் மீனவா்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மத்திய அரசின் சாகா்மாலா திட்டத்தை திமுக தொடா்ந்து எதிா்க்கும் என்றாா் அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சிக்காக திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

செந்தலைப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவா்கள் கூட்டத்தில்  மீனவா்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவா் மேலும் பேசியது:

நான் மட்டும் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை நாள்தோறும் கைது செய்து, புதிய உத்வேகத்தை கொடுத்தது அதிமுக அரசுதான். மீனவா்களுக்கும், சிறுபான்மையினருக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும். மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாகா்மாலா திட்டத்தை திமுக தொடா்ந்து எதிா்க்கும். மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா், தனது துறையை முறையாக கவனிக்காததால்   மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய பாஜக அரசுக்கு அனைத்துவிதத்திலும் ஆதரவாக உள்ள அதிமுகவை தோ்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப, மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள், பேராவூரணி,  சேதுபாவாசத்திரம் நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், இளைஞரணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீனவா்கள் கூட்டத்தை முடித்துவிட்டு,  பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கோவேந்தன் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com