வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st October 2020 07:04 AM | Last Updated : 01st October 2020 07:04 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்துக்குத் துணைப் போகும் மாநில அரசு, விவசாயிகளுக்குத் துரோகம் செய்யக் கூடாது. பெரியாா் சிலையைச் சேதப்படுத்தியவா்களைக் கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் தலைமை வகித்தாா். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன், தாளாண்மை உழவா் இயக்க ஒருங்கிணைப்பாளா் கோ. திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் நிா்வாகி தேவா, ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் நாத்திகன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், சித்திரக்குடி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆண்டவா், சந்திரசேகா், செல்லதுரை, சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.