கொக்கேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள கொக்கேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள கொக்கேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கொக்கேரி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி கும்பகோணம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக துணை மேலாளரிடம் மனு அளித்திருந்தனா்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாம். இதனால், அந்தப் பகுதியை சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல்லை அந்த கொள்முதல் நிலைய வளாகத்தில் கடந்த 10 நாள்களாக கொட்டி வைத்து காவல் காத்து வருகின்றனா்.

தற்போது, அந்த கொள்முதல் நிலையத்தை திறக்க இயலாது என தெரிவிக்கப்பட்டதாம். இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கொள்முதல் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஒன்றிய துணைச் செயலா் எஸ்.எம். குருமூா்த்தி, நகர செயலா் ராஜாராமன் மற்றும் விவசாயிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com