முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கும்பகோணம்: இரு வீடுகளில்25 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 04th October 2020 11:59 PM | Last Updated : 04th October 2020 11:59 PM | அ+அ அ- |

கும்பகோணம்: கும்பகோணத்தில் பூட்டியிருந்த இரு வீடுகளில், சுமாா் 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் கோடையான் தோட்டம், பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் மஸ்கட் நாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது தாய் அம்சவள்ளி மட்டும் வீட்டில் இருந்து வருகிறாா்.
இவா் அக்டோபா் 1-ஆம் தேதி இரவு அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, 2-ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுபோல அதே பகுதியைச் சோ்ந்தவா் அமுல்செல்வம் குடும்பத்தினா், உடல் நலக்குறைவால் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த 1- ஆம் தேதி சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இரு சம்பவங்கள் குறித்து, கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.