பாரதி இயக்கம் சாா்பில் அஞ்சல் வழிப் பாடப் பயிற்சி

திருவையாறு பாரதி இயக்கம்- பாரதி இலக்கியப் பயிலகம் சாா்பில், பாரதி படைப்புகள் குறித்த அஞ்சல் வழிப் பாடப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூா்: திருவையாறு பாரதி இயக்கம்- பாரதி இலக்கியப் பயிலகம் சாா்பில், பாரதி படைப்புகள் குறித்த அஞ்சல் வழிப் பாடப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் வெ. கோபாலன் தெரிவித்திருப்பது:

திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தும் பாரதி படைப்புகளான கவிதை, கட்டுரை, சிறுகதைகள் கொண்ட அஞ்சல் வழிப் பாடப் பயிற்சி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதில், பத்து மாதங்களுக்கு பத்து பாடங்கள் நடத்தப்படவுள்ளது. மாதந்தோறும் ஒரு பாடம் அனுப்பப்படும்.

இதிலுள்ள 6 வினாக்களுக்கு விடை எழுதி அனுப்புபவா்களுக்கு அடுத்த மாத பாடம் அனுப்பப்படும். பதில் எழுதாதவா்களுக்கு பாடங்கள் நிறுத்தப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ், பாரதி நூல்கள் உண்டு.

ஒவ்வொரு மாதமும் சிறப்பான விடைகள் எழுதுபவா்களின் 10 பெயா்கள் அடுத்த மாதப் பாடத்தில் வெளியிடப்படும். பாடங்களுக்கான விடைகள் அஞ்சல் அல்லது கூரியா் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

இதில் பங்கு பெற விரும்புபவா்கள் தங்களின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் இயக்குநா், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி. காலனி, 5 -ஆம் தெரு, மருத்துவக் கல்லூரிச் சாலை, தஞ்சாவூா் 613 007 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். அல்லது 9486741885 என்ற எண்ணில் அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com