முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கூனஞ்சேரி, திருவைகாவூரில் கால்நடைகிளை மருத்துவ நிலையம் திறப்பு
By DIN | Published On : 04th October 2020 12:20 AM | Last Updated : 04th October 2020 12:20 AM | அ+அ அ- |

கால்நடை கிளை மருத்துவ நிலையத்தில் பசுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பாா்வையிடுகிறாா் வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணு.
பாபநாசம்: பாபநாசம் வட்டத்திலுள்ள கூனஞ்சேரி, திருவைகாவூா் ஊராட்சிகளில் கால்நடை கிளை மருத்துவ நிலையத்தை வேளாண் அமைச்சா் இரா. துரைக்கண்ணு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் ஐயப்பன், ஒன்றியச் செயலா்கள் கோபிநாதன், பழனிசாமி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தமிழ்ச்செல்வன், கும்பகோணம் உதவி இயக்குநா் கண்ணன், கால்நடை மருத்துவா்கள் ஏஞ்சலினா சொா்ணமதி, வடிவேலன், சரவணன், ஊராட்சித் தலைவா்கள் பவுனம்மாள் பொன்னுசாமி, பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.