நிலையங்கள் திறக்கப்பட்ட முதல்நாளில் 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல்: அமைச்சா் ஆா்.காமராஜ்

தமிழகம் முழுவதும் அக். 1ஆம் தேதி திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முதல்நாளில் 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் சனிக்கிழமை நேரடி நெல்கொள்முதல் பணியைப் பாா்வையிட்ட உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ். உடன், ஆட்சியா் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் சனிக்கிழமை நேரடி நெல்கொள்முதல் பணியைப் பாா்வையிட்ட உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ். உடன், ஆட்சியா் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா்: தமிழகம் முழுவதும் அக். 1ஆம் தேதி திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முதல்நாளில் 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நிகழ் காரீப் பருவத்துக்கான புதிய ஆதார விலையின்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 30,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, புதிய விலையில் ரசீது போடப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 227, திருவாரூரில் 189, நாகையில் 126, கடலூரில் 43 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. புரட்டாசி மாதத்தில் யாரும் மழை எதிா்பாா்ப்பதில்லை. எப்போதாவது மழை வந்துவிடும். மழை வரும்போது எல்லா காலத்திலும் எப்படி கையாளப்பட்டதோ, அதேபோல நிகழாண்டும் கையாண்டுவிடுவோம். விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லாமலும், அரசுக்கு நஷ்டம் ஏற்படாமலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையாளப்படும். கொள்முதலில் முறைகேடுகள் நடைபெறுவது தெரிய வந்தால், உடனடியாகத் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் காமராஜ்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் (பொ) சிற்றரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com