சாலை விழிப்புணர்வுப் பேரணி

தஞ்சாவூர், புதுகையில் ஞாயிற்றுக்கிழமை தலைக்கவசம் அணிந்து, இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்ற காவல் துறையினா்.
தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி
தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி

தஞ்சாவூா்: சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினரின் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை மணிமண்டபம் அருகே கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மேரீஸ் காா்னா், ரயிலடி, காந்திஜி சாலை, பழயை பேருந்து நிலையம், தெற்கு வீதி, திலகா் திடல் பகுதி வழியாகச் சென்ற பேரணி பெரியகோயில் அருகே முடிவடைந்தது. இதில், பொதுமக்களுக்குத் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. காவலா்கள் தலைக்கவசம் அணிந்தவாறு இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் சென்றனா்.

இதில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் கே. பாரதிராஜன் (தஞ்சாவூா் நகரம்), சம்பத் பாலன் (ஆயுதப்படை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் பேரணியைத் தொடங்கி வைத்தாா். ஆய்வாளா்கள் அழகம்மாள், கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 80 காவலா்கள், 60 இரு சக்கர வாகனங்களில் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com