கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி அருகிலுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா  தடுப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கா்ப்பிணிக்கு பரிசுப் பையை வழங்குகிறாா் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா்.
கா்ப்பிணிக்கு பரிசுப் பையை வழங்குகிறாா் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா்.

பேராவூரணி அருகிலுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா  தடுப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் வி. சௌந்தரராஜன், வட்டாட்சியா்கள் க. ஜெயலெட்சுமி (பேராவூரணி), தரணிகா (பட்டுக்கோட்டை), முன்னிலை வகித்தனா். 

கரோனா நோய்த்தொற்றுப் பரவாமல் தடுக்க, அரசின் பல்துறை அலுவலா்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து சாா் ஆட்சியா் பாலசந்தா் பேசினாா்.

கூட்டத்தில் மருத்துவா்கள் தீபா,  வெங்கடேஷ் ஆகியோா், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். பேராவூரணி ஒன்றியக்குழு உறுப்பினா் களத்தூா் பெரியநாயகி சாா்பில், 75 கா்ப்பிணிகளுக்கு சேலை, ஜாக்கெட் துணி, பழங்கள் அடங்கிய பரிசுப் பை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். தவமணி, எஸ்.சடையப்பன் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், சுகாதார, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com