மீனாட்சி மருத்துவமனையில் 12 வயது சிறுவனுக்கு கை எலும்பு மறுசீரமைப்பு சிகிச்சை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில், 12 வயது சிறுவனுக்கு கை எலும்பு மறு சீரமைப்பு சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
மீனாட்சி மருத்துவமனையில் 12 வயது சிறுவனுக்கு கை எலும்பு மறுசீரமைப்பு சிகிச்சை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில், 12 வயது சிறுவனுக்கு கை எலும்பு மறு சீரமைப்பு சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

இதுகுறித்து இம்மருத்துவமனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் சினேகன் (12). இவருக்குப் பிறவியிலேயே இரண்டு கைகளும் வளைந்து இருந்தன. மேலும் இவா் வளர, வளர கைகள் மேலும் வளைந்து, தனது தேவைகளைக் கூட செய்து கொள்ள முடியாத நிலையில் பல ஆண்டுகளாகச் சிரமப்பட்டாா். இது அவரது பள்ளிப்படிப்புக்குப் பெரும் இடையூறாகவும் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவா் செந்தில்குமாரிடம், சினேகனுடன் அவரது பெற்றோா் ஆலோசனை பெற்றனா். அப்போது, இது ரேடியல் கிளப் கை என கண்டறியப்பட்டது. இது இரண்டு லட்சம் பேரில் ஒரு குழந்தைக்கு வரும் அரிய வகை பிறவிக் குறைபாடாகக் கருதப்படுகிறது.

இந்தக் குறைபாட்டை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சிறுவன் சினேகனின் வலது கையைப் புதுமையான இல்லிசாரோ முறையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனா். இடது கை சிகிச்சை நவம்பா் மாதத்தில் மேற்கொள்ளப்படும்.

தற்போது சினேகன் மற்ற குழந்தைகளைப் போல, தனது தேவைகளையும், பள்ளிப்படிப்பையும் சிறப்பாகத் தொடங்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல்வேறு வகையான கை, கால் குறைபாடு, மறு சீரமைப்பு சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மீனாட்சி மருத்துவமனையின் எலும்பு அறுவைச் சிகிச்சை துறையால் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com