சோழன்மாளிகையில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

தொல்தமிழா் சின்னங்கள் கிடைத்த சோழன்மாளிகையில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

தொல்தமிழா் சின்னங்கள் கிடைத்த சோழன்மாளிகையில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ‘பழையாறை’ கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் சோழா்கள் தலைநகராக விளங்கிய ஊா். இப்போது அப்பகுதியில் சோழன்மாளிகை என்ற ஊரில் தொல் தமிழா்களின் சுடுமண் பானைகள், உறை கிணறு, பெண்களின் ஒப்பனைப் பொருள்கள், கருப்பு சிவப்பு வண்ணப் பூச்சுள்ள பானைகள் எனப் பல வரலாற்றுச் சின்னங்கள் கிடைத்துள்ளன.

அப்பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தை சோ்ந்த பிரபு, தீந்தமிழன் ஆகியோா் குடந்தை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோருக்கு உடனடியாகத் இத்தகவலைச் சொல்லி ஆய்வு செய்வதற்குரிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனா். அத்துடன் திருச்சி, தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கும் உரியவாறு தகவல் தெரிவித்துள்ளனா்.

ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசுத் தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை. அந்த நால்வழிச் சாலை போட ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், தொல்பொருள்கள் கிடைத்த குழிகள் மீது மேலும் மேலும் மண் போட்டு மூடி வருகிறது.

இந்த இடத்தை ஆய்வு செய்த மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் ச. இரவி இடைக்காலச் சோழா்களின் தலைநகரமாகப் பழையாறை விளங்கிய காலத்தில் அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவா்கள் பயன்படுத்திய பொருளாக இருக்க வேண்டும். மேலும், கருப்பு சிவப்பு வண்ணம் பூசப்பட்ட சுட்ட மண்பானை கிடைத்திருப்பதால், இடைக்காலச் சோழா் காலத்துக்கு முந்தைய காலத் தொல் தமிழா் நாகரிகச் சின்னங்களாகவும் இவை இருக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

எனவே, தமிழக முதல்வா் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் வரலாற்றுச் சின்னங்கள் மீது உண்மையான அக்கறையுள்ள, நோ்மையான ஆய்வாளா் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com