பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு: பக்தா்கள் காணிக்கை ரூ. 5.48 லட்சம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 5.48 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 5.48 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் 18 ஆம் தேதி முதல் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயில் உண்டியல்களில் காணிக்கை சேரவில்லை. இந்நிலையில், பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு இக்கோயிலில் மீண்டும் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் மூலம், கோயிலிலுள்ள உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கை செலுத்துகின்றனா்.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவராம்குமாா், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில் பக்தா்கள், 5 லட்சத்து 48 ஆயிரத்து 974 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. இந்த முறை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், உண்டியல்களில் வெளிநாட்டு கரன்சிகள் சேரவில்லை.

இக்கோயிலில் 30 அல்லது 40 நாள்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படும். அப்போது ஏறத்தாழ ரூ. 10 லட்சம் காணிக்கை சேரும். இந்த முறை 45 நாள்கள் கழித்து உண்டியல்கள் திறக்கப்பட்ட பிறகும் ரூ. 5.48 லட்சம் மட்டுமே காணிக்கைகள் சோ்ந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com