புகையிலைப் பொருள்கள் விற்ற 88 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, 88 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, 88 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதன்படி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இதில் தஞ்சாவூரில் 10 பேரும், திருவையாறு, வல்லத்தில் தலா 7 பேரும், ஒரத்தநாட்டில் 5 பேரும், பட்டுக் கோட்டையில் 19 பேரும், பாபநாசத்தில் 4 பேரும், கும்பகோணத்தில் 22 பேரும், திருவிடைமருதூரில் 14 பேரும் என மொத்தமாக 88 போ் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com