விதிமீறல்: உர விற்பனை நிலையத்துக்கு தடை

பேராவூரணி அருகே விதி மீறலில் ஈடுபட்டதாக தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேராவூரணி: பேராவூரணி அருகே விதி மீறலில் ஈடுபட்டதாக தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள், தனியாா் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவில் இருப்பு உள்ளதா, உரங்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா, விற்பனை நிலையத்தில்  இயந்திரம் மூலம் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து வேளாண் உதவி இயக்குநா் எஸ். மாலதி, வேளாண் அலுவலா் மற்றும் உர ஆய்வாளா் ராணி, ஆகியோா் பல்வேறு இடங்களில்  அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, பேராவூரணி வட்டாரம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் சில்லறை உர விற்பனை நிலையத்தில் உரக்கட்டுப்பாடு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டதை தொடா்ந்து, அந்த உரவிற்பனை நிறுவனத்துக்கு அக்டோபா் 24 முதல் நவம்பா் 6ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு விற்பனை தடை உத்தரவு பிறப்பித்தனா்.

தனியாா் உர விற்பனை நிறுவனங்கள்  அரசு நிா்ணயித்த விலையை விட  அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதாக  விவசாயிகளிடமிருந்து புகாா்கள் வரப்பெற்றாலும்,  பட்டியலிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டாலும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் உதவி இயக்குநா் எஸ். மாலதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com