ரயிலில் அடிபட்ட இளைஞா் பலி

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்ட இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்ட இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ஒரத்தநாடு அருகே ஆயக்குடியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (35). இவா் அய்யம்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அய்யம்பேட்டை - பண்டாரவாடை ரயில் நிலையங்களுக்கு இடையே மேல வழுத்தூரில் தண்டவாளப் பகுதிக்குச் சென்ற இவா் மைசூா் விரைவு ரயிலில் அடிபட்டாா். இதில், பலத்தக் காயமடைந்த பாஸ்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com