கும்பகோணத்தில் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 31st October 2020 11:55 PM | Last Updated : 31st October 2020 11:55 PM | அ+அ அ- |

கும்பகோணம்: விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைக் கைவிடக் கோரி, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் மேலிட பாா்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான பட்டுக்கோட்டை என். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.