760 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 760 கிலோ புகையிலை போதை பொருள்களையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் சிறப்புக் காவல் பிரிவினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.


கும்பகோணம்: கும்பகோணத்தில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 760 கிலோ புகையிலை போதை பொருள்களையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் சிறப்புக் காவல் பிரிவினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

கும்பகோணம் மும்மூா்த்தி விநாயகா் கோவில் சன்னதி தெருவில் போதை பொருள்களைச் சிலா் மொத்த விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருப்பதாக தஞ்சாவூரில் உள்ள திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவலா்களுக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து ஆய்வாளா் லெட்சுமணன் தலைமையிலான காவலா்கள் மும்மூா்த்தி விநாயகா் கோவில் சன்னதி தெருவில் புதன்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது, 760 கிலோ குட்கா, ஹான்ஸ், 30 பைகளில் 21 கிலோ எடையுள்ள போலியான புகையிலை பொருட்கள், 5 ஆயிரம் எண்ணிக்கையில் பீடி கட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

மேலும், மேற்கண்ட பொருள்களை விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 1.04 லட்சம் ரொக்கத்தையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இவற்றை பதுக்கி வைத்து மொத்த விற்பனைக்காகக் கிடங்குகளில் இருப்பு வைத்திருந்த திருஞானசம்பந்தா் தெருவில் வசிக்கும் தங்கஒளிவு மகன் ஜெயப்பிரகாஷை (37) காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com